போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இனி பயங்கரவாதிகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் அழைக்கப்படுவர்.! அமெரிக்க அதிபர்ட்ரம்ப்.!

உலகம்

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இனி பயங்கரவாதிகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் அழைக்கப்படுவர்.! அமெரிக்க அதிபர்ட்ரம்ப்.!

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்றார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே 200 முக்கியமான உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிக்கிறார்.

அவர் முதல் கையெழுத்து போடும் சட்டங்களில்.. 6 முக்கியமான விஷயங்கள் குறித்த அறிவிப்புகளை தனது உரையில் வெளியிட்டு உள்ளார்.

1. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள். இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.

2. மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே 3 நாடுகளின் முக்கிய பகுதிகளை கைப்பற்றும் விதமாக அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு சிறப்பு அதிகாரிகளை வழங்கும் சட்டத்தை கொண்டு வர அவரின் குடியரசு கட்சி முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

3 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 3ம் பாலினத்திற்கும், LGBTQ பிரிவினருக்கும் எதிராக அடிக்கடி கருத்து தெரிவிக்க கூடியவர். அந்த வகையில் அவர் தற்போது எடுத்துள்ள முடிவு ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி FBI அமைப்பில் இருக்கும் பாலின, இன ரீதியிலான துறையை மூட முடிவு செய்துள்ளார். இந்த FBI பிரிவி பாலின ரீதியிலான குற்றங்கள், இன அதாவது கறுப்பின, வெள்ளையின ரீதியிலான குற்றங்களை மட்டும் விசாரிக்கும். இதை நீக்க முடிவு செய்துள்ளார்.

4. அதேபோல் இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது.. அமெரிக்காவில் மற்ற பாலினங்களுக்கு அனுமதி இல்லை என்று அதை குற்றமாக்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

5. போதைப்பொருள் கடத்தல்காரர்களை பயங்கரவாத அமைப்புகளாக முறையாக அறிவித்துள்ளார். இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இனி தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்படுவர்.

6. நாட்டின் தணிக்கை அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் யாரும் என்ன கருத்தும் தெரிவிக்கலாம். இனி பொது ஊடகங்களில் யாருடைய கருத்தும் தணிக்கை செய்யப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.