தேங்கிய மழைநீரை மணலை கொட்டி அப்புறப்படுத்திய போக்குவரத்து காவலர்.!

Chennai

நாவலூர் ஓ.எம்.ஆர்.சாலையில் தேங்கிய மழைநீரை மணலை கொட்டி அப்புறப்படுத்திய போக்குவரத்து காவலர். 

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூர் ஓ.எம்.ஆர் சாலையில், கன மழையின் காரணமாக மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர். 

உடனடியாக கேளம்பாக்கம் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரியும் முதல்நிலை காவலர் ராம்குமார் என்பவர் 
தேங்கிய மழை நீரில் மணலை போட்டு மழை நீரை அப்புறப்படுத்தி சீர் படுத்தினார். 

வாகன ஓட்டிகளுக்காக மழை நீரை மணல் போட்டு அப்புறப்படுத்திய காவலரை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.