ஊழல் தடுப்புச் சட்டம் 1988 - பாகம் - 3

Prevention of curruption act

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 - பாகம் - 3

அரசுப் பணியாளர் கைக்கூலி பெறுதல்  ( பிரிவு 7 )

அரசுப் பணியாளர் தன்னுடைய அரசுப் பணி மூலம் அலுவல் முறை செயல் எதையாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க, அல்லது எவருக்கேனும் சலுகையோ, சலுகையின்மையோ காட்ட அல்லது காட்டாமல் விட, அல்லது நன்மையோ தீமையோ செய்வதற்கு அல்லது செய்ய முயற்சிப்பதற்கு வெகுமதியாக தமக்கோ அல்லது வேறு எவருக்கோ கைக்கூலி எதையாவது ஏற்றுக் கொண்டால், அல்லது கேட்டுப்பெற முயற்சித்தால், அவருக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

விளக்கங்கள் 

அரசு பதவியை வகிக்கப்போவதாக நம்பச் செய்து, ஏமாற்றி கைக்கூலி பெற்றால், இப்பிரிவில் வரையறை செய்யப்பட்டுள்ள குற்றத்தை அவர் செய்தவராக கருதப்படமாட்டார்.

கைக்கூலி என்பது பணத்தால் மதிப்பிடதக்கது மட்டுமே அல்ல.

சட்டப்படியான பணி ஊதியம் என்பது அரசால் அல்லது நிறுவனத்தால் அனுமதிக்கப்படுகிற பணி ஊதியங்கள் அனைத்தும் அடங்கும்.

அரசுப் பணியாளர் ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைக்கூலி பெறுதல் ( பிரிவு 8 )

அரசுப் பணியாளர் எவரும், பிரிவு 7 - ல் குறிப்பிடப்பட்டுள்ள செயலைச் செய்ய , தமக்கோ அல்லது வேறு எவருக்கோ, ஊழல் அல்லது சட்டவிரோதமான வகையில் வெகுமதியாகக் கைக்கூலி எதையாவது பெற்றுக் கொண்டால் அல்லது கேட்டுப்பெற முயற்சித்தால், அவருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

மு.ர.                                                   தொடரும்