முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து.!

தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து.!
வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் பதிவு.!

முதலமைச்சரைச் சந்தித்துத்
தைத்திருநாளுக்கும்
தமிழ்ப் புத்தாண்டுக்கும்
வாழ்த்துச் சொன்னேன்

மகிழ்ச்சியோடும்
மலர்ச்சியோடும் உரையாடித்
தனது புத்துணர்ச்சியை
எனது நெஞ்சுக்குக் 
கடத்திவிட்டார்

புதுரூபாய் நூறு
பரிசு தந்தார்

பெற்றுக்கொண்டு
நினைத்தேன்:

"கலைஞர்
ஒவ்வொரு தைத்திருநாளிலும்
10 ரூபாய் பரிசளிப்பார்;
தளபதியோ 100 ரூபாய் தந்திருக்கிறார்.
தளபதி ஆட்சியில்
தனிநபர் வருமானம்
பெருகியிருக்கிறது என்று
தேசியத் தரவு சொல்கிறது"

அதைப்
புரிந்துகொண்டு
புன்னகைத்தேன்

இதில் தந்தையைத்
தாண்டிவிட்டார் தளபதி என கவிஞர் வைரமுத்து பெருமிதம்.