பேட் கேர்ள் திரைப்படம் குறித்து மதுவந்தி கருத்து.!
தமிழகம்

சென்னை: தமிழ்நாட்டில இருக்கிற பிராமணர்கள் இப்பவும் முழிச்சுக்கலேன்னா, சத்தியமாக எந்த கடவுள் வந்தாலும், உங்களை எல்லாம் காப்பாத்த முடியாது" என்று மதுவந்தி காட்டமாக கூறியிருக்கிறார்.
அத்துடன், பேட் கேர்ள் படத்துக்கு, தன்னுடைய கண்டனதையும் பதிவு செய்துள்ளார்.
"பேட் கேர்ள்" படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது.. சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பல விசயங்களை உடைத்து பெண்களின் குரலை பேசுவதாக இந்த படம் உள்ளதாம்.
அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. அந்தவகையில், பாஜகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில், Madhuvanthii Talks என்ற யூடியூப் சேனலுக்கு மதுவந்தி ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், "ஊர் பூரா போஸ்டர்.. நேத்துதான் "பேட் கேர்ள்" படத்தின் டீசர் ரிலீஸ் ஆயிருக்கு.. கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது.. அதுபோல, இதை பற்றி பேச எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு.. "சில விஷயஙகளை பற்றி பேசறதுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் கிடையாது, ஏன்னா அவங்க எல்லாரும் சங்கிகள்" ன்னு சொன்னால் எப்படி ஏத்துக்கறது?
கருத்து சுதந்திரம்: "பேட் கேர்ள்" படத்தின் டீசர், கதைகளம் அதுக்குள்ளேயே நான் வரல. "காஷ்மீர் ஃபைல்ஸ்" போன்ற படங்கள் வரும்போது, உடனே ஒரு கும்பல் கிளம்பி, இப்ப எதுக்காக இந்த படத்தை எடுக்கணும்னு கேட்டாங்க.. அப்படின்னா, இந்த "பேட் கேர்ள்" படத்தை இப்ப எதுக்கு எடுக்கணும்? என்று கேட்கவும் நாலு பேர் வருவாங்க. அதை ஏத்துக்க தெரியணும்... அதுதான் கருத்து சுதந்திரம்.. அதன் பெயர்தான் ஜனநாயகம்.
சமீபத்தில் "அமரன்" என்ற படத்தை பற்றி நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன்.. அது ஒரு பயோபிக்.. எப்போதுமே வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்போது, உண்மையை சரியாக சொல்ல வேண்டும். இன்னாரை பற்றிதான் படம் எடுக்கிறோம் என்பதை சொல்லித்தான், நீங்கள் அந்த படத்தை எடுக்கறீங்க.. அப்படியானால், அங்கே தவறு செய்ய முடியாது..
பிராமணர்: ஆனால், உண்மையை சொல்லி எடுக்க வேண்டிய அந்த வரலாற்று படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் ஒரு "பிராமணர்" என்று சொல்ல மறுத்துட்டாங்க.. படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் வரை அதை மூடி மறைச்சிட்டாங்க..
அந்த பிராமண்ர் சாதிச்சதுதான் அவ்வளவு பெரிய விஷயங்களும். மதம் மாறி திருமணம் செய்தாலும், அவரை யாருமே தடுக்கல.. அப்பவே அந்த குடும்பத்தில், முற்போக்கு சிந்தனையும் இருந்திருக்கிறது. ஆனால் அவர் பிராமணர் என்பதை மட்டும் சொல்ல துணிச்சல் இல்லை.. எதுக்காக பயந்தீங்க, ஏன் மூடி மறைச்சீங்க தெரியல
ஒரு பயோபிக்கில், ஒரு பிராமணர் என்பதை காட்டுவதற்கு வெட்கப்பட்ட கும்பல், "பேட் கேர்ள்" என்ற படத்தில் மட்டும், ஏன் அந்த பெண்ணை, பிராமண பெண்ணாக காட்டறீங்க? உங்களுக்கு வேற குடும்பமே கிடைக்கலியா? ஏன் சாதியை மூடி மறைச்சிருக்கலாமே? அனைத்தையும் உடைத்துக் கொண்டு செல்ல நினைப்பது பிராமண பெண்களா? நீங்க வந்து பார்த்திருக்கீங்களா? பிராமண குடும்பங்களில் பெண்களை எப்படி வளர்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எப்ப பார்த்தாலும் பிராமணரையே தாக்குவது, கீழ்த்தரமான, வக்கிரத்தனமான புத்தி.
வரலாற்று படம்; ஒரு வரலாற்று படத்தில், மேஜர் முகுந்தை பிராமணர் இல்லைன்னு மறைச்சு மறைச்ச எடுக்கறீங்க.. ஆனால், ஒரு கற்பனை கதையில், பெண்ணை பிராமணர் என்று காட்டணுமா? உங்களுக்கு என்ன தெரியும் பிராமணர்களை பற்றி? இந்த நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் பற்றி என்ன தெரியும்? எவ்வளவு பிராமணர்கள் சாதித்துள்ளார்கள்? எவ்வளவு பிராணமர்கள் இன்னமும் கஷ்டப்பட்டுட்டு இருக்கிறார்கள் தெரியுமா?
இந்த வம்பே வேணாம்னுதான், பிராமணர்களில் ஒருகூட்டம், வெளிநாட்டுக்கே போயாச்சு.. அப்பவும் விடறது இல்லை.. எப்ப பார்த்தாலும் அவங்களை தப்பாவே சொல்லிட்டு இருக்கீங்க?
ரொம்ப தப்பு: ஒன்னு பிராமண ஆதிக்கம்னு சொல்றது, இல்லாட்டி மோசமானவர்கள் பிராமணர்கள்தான் என்று சொல்வது.. இப்படி அசிங்கப்படுத்துறது ரொம்ப தப்பு.. இதுல என்ன ஒரு வேதனையென்றால், இந்த படத்தை தயாரித்தவர்களில் பலர் பிராமணர்கள் இருக்கிறார்கள்.. இதுதான் வருத்தமாக இருக்கு.. எதிரி வெளியில் இல்லை.. உள்ளேயே இருக்காங்க.. இப்பவும் தமிழ்நாட்டில இருக்கிற பிராமணர்கள் முழிச்சுக்கலேன்னா, சத்தியமாக எந்த கடவுள் வந்தாலும், உங்களை எல்லாம் காப்பாத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ செய்திகளை காண இணைந்திடுங்கள் YouTube சேனலில்