கேரம் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு பரிசு தொகை
விளையாட்டு

விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட_மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை சார்பாக வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.
அவரைப்போலவே மித்ரா 2 தங்கம்,நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.
எனவே முதலமைச்சர் உத்தரவின்படி,
எம்.காசிமா -விற்கு ரூ.1 கோடி.
வி.மித்ரா -விற்கு ரூ.50 லட்சம்.
கே.நாக ஜோதி -யிற்கு ரூ.50 லட்சம்.
என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும் என கேரம் வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.