ஜவளகிரியில் ஒற்றை யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!
கிருஷ்ணகிரி

ஜவளகிரியில் ஒற்றை யானை தாக்கி ஒருவர் படுகாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி கிராமத்தில் நந்திமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்யும் வரும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஜெயராமன் (70) என்பவரை இன்று காலை 6-30 மணியளவில் ஒற்றை யானை தாக்கியது.
படுகாயங்களுடன் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கிய சம்பவம் தற்போது ஜவளகிரியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
செய்தியாளர்
மாருதி மனோ