சிறுசேரியில் சமையல் செய்யும் போது கேஸ் கசிந்து தீ விபத்து, மூதாட்டி 60% தீக்காயம்.!

சென்னை

சிறுசேரியில் சமையல் செய்யும் போது கேஸ் கசிந்து தீ விபத்து, மூதாட்டி 60% தீக்காயம்.!

சிறுசேரியில் சமையல் செய்யும் போது கேஸ் கசிந்து தீ விபத்து, மூதாட்டி 60% தீக்காயம். 

சென்னை அடுத்த ஓ.எம்.ஆர்.சிறுசேரியை சேர்ந்தவர் வயதான மூதாட்டி சந்திரா(80), இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்ய கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார் அப்போது ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது. 

திடீரென அதிகப்படியான கேஸ் கசிவின் காரணமாக தீப்பிடித்துள்ளது. 

இந்த தீ மூதாட்டியின் மீது படர்ந்து உடல் முழுவதும் எரிய தொடங்கியது. 

உடனடியாக அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 60% தீக்காயம் இருப்பதால் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.