நாடு முழுக்க விஷ ஊசிகளை தயார் செய்யுங்கள் டிரம்ப் அதிரடி.!
உலகம்

https://youtube.com/@newstodaytamil-e1y?si=Q1IoCmdpwigQFI_9
நியூயார்க்: நாடு முழுக்க விஷ ஊசிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்.. தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கொடுங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வான பின் பல்வேறு முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் பிறப்பித்த 200 உத்தரவுகளில் தூக்கு தண்டனை தொடர்பான உத்தரவும் ஒன்று. அதன்படி ஒரு குற்றவாளி மரணதண்டனைக்கான குற்றத்தை செய்து இருந்தாலோ.. அல்லது அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ளவர்கள் பெரிய குற்றங்களை செய்து இருந்தாலோ அந்த குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.
இது போன்ற தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கொடுங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். ஒவ்வொரு கவுண்டியிலும் உள்ள விதிப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த விதிகளை பின்பற்ற வேண்டாம்.. எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தூக்கு தண்டனை கொடுக்கலாம். இதற்காக நாடு முழுக்க விஷ ஊசிகளை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவோர் இனி தீவிரவாதிகள் என அழைக்கப்படுவர் - அதிபர் டிரம்ப்
தூக்கு தண்டனை:
அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் ஆட்சியை விட்டு செல்லும் முன் பொதுவாக சில குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இந்த முறை ஜோ பிடன் இதை பயன்படுத்தி பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். முக்கியமாக மரண தண்டனையில் இருக்கும் பலருக்கும் கூட மன்னிப்பு வழங்கி உள்ளார்.
முன்னாள் அதிபர் பிடன், தனது பதவியில் இருக்கும் கடைசி மாதத்தில், மரணதண்டனைக்காக காத்திருக்கும் 40 கைதிகளில் 37 பேரின் தண்டனைகளை குறைத்து உள்ளார். பரோலில் செல்ல வாய்ப்பு இல்லாத ஆயுள் தண்டனை கைதிகளாக இவர்களை அறிவித்தார்.
இப்படிப்பட்ட விடுவிக்கப்பட்டவர்களில் 9 பேர் சக கைதிகளைக் கொன்ற குற்றத்திற்காகவும், 4 பேர் வங்கிக் கொள்ளையின் போது செய்யப்பட்ட கொலைகளுக்காகவும், சிறைக் காவலரைக் கொன்றதற்காகவும் சிறையில் இருந்தனர். இவர்களைத்தான் பிடன் விடுதலை செய்துள்ளார். அதோடு பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற நிலையில் பல பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அதன்படி, நம் நாட்டில் உள்ள மிக மோசமான கொலையாளிகள் 37 பேருக்கு ஜோ பிடன் மரண தண்டனையை நீக்கி உள்ளார். இதை ஏற்க முடியாது. அவரின் செயல் நாட்டையே மோசமாக்கும். இந்த நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும்.
பிடன் எதை எல்லாம் செய்ய கூடாதோ.. அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஆட்சியை விட்டு போகும் முன் இன்னும் சிலரை விடுவிக்கப்போகிறார் என்று நினைக்கிறேன். அவர் இந்த நாட்டை மோசமாக மாற்ற போகிறார்.
நான் அப்படி விடமாட்டேன். பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், கொலைகாரர்கள், சிறுவர் சிறுமிகளை துன்புறுத்துபவர்களை விட மாட்டேன். அவர்களை எல்லாம் கண்டிப்பாக தூக்கு தண்டனைக்கு உட்படுத்துவேன். அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு சண்டை கிடைக்கும். நான் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சட்டம் கடமையை செய்யும். சட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். தூக்கு தண்டனையை குறைக்காமல் பார்த்துக்கொள்வேன், என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.