முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் கமலஹாசன் நேரில் சந்திப்பு.!
சென்னை

தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன் என மநீம தலைவரும் நடிகருமான கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.
மேலும் உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன் எனவும்
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
ஆகவே அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை.என முதல்வருடனான சந்திப்பில் கூறியுள்ளார் கமலஹாசன்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு
97 87 416 486