வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

திருப்பத்தூர்

வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஜோலார்பேட்டையில் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி வக்கணம்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரிரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் மாநில பொதுச் செயலாளர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது, தமிழக பள்ளிக்கல்வி துறையில் தற்போது பெரும் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது,

குறிப்பாக ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் டிசில்வா, மாவட்ட பொருளாளர் அறிவண்ணல், துணை தலைவர் அமுதா, துணை செயலாளர் முரளி, வட்டார செயலாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் வெங்கடபதி நன்றி கூறினார்.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்