கிராமப்புரங்களில் பி.எஸ்.என்.எல் சிக்னல் கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

கிருஷ்ணகிரி

கிராமப்புரங்களில் பி.எஸ்.என்.எல் சிக்னல் கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராமப்புரங்களில் பி.எஸ்.என்.எல் சிக்னல் கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் முறையான பதில் இல்லாததால் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் இராமகவுண்டர் பேட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், விவசாயத்திற்கு முதன்மை மாவட்டமாக பெயர் பெற்று விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் காய்கறிகள், மா, மற்றும் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அதிகப்படியான கிராம பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பி.எஸ்.என்.எல் சேவை முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் உள்ளிட்ட விவசாயிகள் கிருஷ்ணகிரியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக அதிகாரிகளை சந்தித்து பி.எஸ்.என்.எல் சிக்னல் கிடைக்காததால் யாரையும் விரைவாக தொடர்புகொள்ள முடிவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் பி.எஸ்.என்.எல் அதிகாரியிடம் இருந்து முறையாக பதில் கிடைக்காததால் விவசாயிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினை விட்டு வெளியே வந்தனர்.

மேலும் இது குறித்து தமிழக விவசயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் பி.எஸ்.என்.எல் சிக்னல் ஒழுங்காக கிடைக்காததால்  விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என கூறி பி..எஸ்.என் எல். அலுவலகம் முன்பு 
பி.எஸ்.என், எல் -க்கு பாடை கட்டி ஒப்பாரி பாடி இறுதி சடங்கு நடத்தும் போராட்டம் நடத்தப் போவதாக செய்தியாளர்களிடம் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.

எனவே பி.எஸ்.என்.எல்.நிர்வாகம் விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக பி.எஸ்.என்.எல்.சேவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் விவசாயிகள் அனைவரும் வேறு சேவைக்க்கு மாறும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாருதி மனோ