திருக்குறளில் திருப்பணிகள் 11 ஆம் நாள் பயிலரங்கம் நடைபெற்றது. !
கிருஷ்ணகிரி
கிருட்டினகிரி நகரம், இராயக்கோட்டை சாலையில் உள்ள தேன்தமிழ் நாட்டியாலயா பள்ளியில் இன்று (29-11-25) சனிக்கிழமை திருக்குறளில் திருப்பணிகள் 11 ஆம் நாள் பயிலரங்கம் நடைபெற்றது.


இதில் மதிப்புறு முனைவர் மது மொழி ஆனந்த் முன்னிலையிலும் கவ்வியாளர் மு.ஸ்ரீரங்கன் பயிலங்க கண்காணிப்பாளர், தமிழாசிரியை மு.லதா ஆகியோர் திருக்குறளை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தனர்.
இறுதியில் குழந்தைகள் கேள்வி, பதிலுமாய் விடையளித்து வள்ளுவரின் வாய்மையை பெருமிதத்தோடு கற்று மகிழ்ந்தனர். பரிசும் பாராட்டும் பெற்று இனிதே பயிலரங்கம் நிறைவுற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ
