தீர்த்தமலையில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில்  தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

தீர்த்தமலையில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில்  தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.!

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா,தீர்த்தமலையில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில்  தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

இத்திருக்கோயிலை கட்டிய சீலப்ப நாயக்கர் வகையறா பட்டயக்காரர் குதிரையில் மேளதாளங்கள் முழங்க திருக்கோயிலை வலம் வந்து தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். மேற்படி தேரோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்குரு ஸ்ரீ யோகிய நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் கலந்துகொண்டு மேற்படி தேரோட்ட நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார்.

விழாவில் சீலநாயக்கர் பரம்பரையினர் பெருமளவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தேரோட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ