அம்பேத்கர் பிறந்த நாள் விழா-மாவட்ட தி.க.தலைவர் கோ.திராவிடமணி மாலை அணிவித்தார்.!
கிருஷ்ணகிரி

கிருட்டினகிரியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா-மாவட்ட தி.க.தலைவர் கோ.திராவிடமணி மாலை அணிவித்தார்
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இந்திய அரசியல் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135- ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கிருட்டினகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு கிருட்டினகிரி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், தி.மு.க.மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகி ஊற்றங்கரை மருத்துவர். நாராயணசாமி, ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணகிரி மாது, காவேரிப்பட்டணம் பெ.செல்வம், ஒன்றிய செயலாளர் கிருட்டினகிரி கி.வேலன், காவேரிப்பட்டணம் பெ. செல்வேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி துணைச் செயலாளர் பூ.இராஜேந்திர பாபு, நகரத் தலைவர் கோ தங்கராசன், நகரச் செயலாளர் ஆ.கோ.இராஜா, தொழிலாளிரணி செ.ப.மூர்த்தி, புலியாண்டூர் சி.இராசா, மா. இரகுநாதன், இராஜேஸ்வரி, இர.ஹேமாவர்சினி, இர.அன்சல் மார்க்ஸ், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் சா ஜோதிமணி, குப்புசாமி, முருகேசன், புகழ்.மகிழன், பெரியார் பிஞ்சுகள் மூ.சங்கத்தமிழ், வே.சரித்திரன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ