நந்தியாலம் கிராம பொதுமக்கள் இன்று சாலை மறியல்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் கிராமத்தில் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்  கிராம அருகிலேயே இலான்   ரெடிமிக்ஸ் மற்றும்  கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் கல்குவாரிகளிலிருந்து  லாரிகள் ஜல்லி, எம் சாண்ட் ஏற்றுக்கொண்டு   இரவு  இரவும் பகலும் ஓயாமல் செல்வதால்  வாகனத்தில் இருந்து வரும் தூசிகள்  வீடு முழுவதும் படிந்து சாப்பிட முடியாமல் உறங்க முடியாமல்  அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

https://youtu.be/jQagYed6cXs?si=pThZ2qvUlozChNaf
 
வயதானவர்களுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் தூசியை அதிகமாக சுவாசிப்பதால் மூச்சு திணல் ஏற்படுவதாகவும்  சிறு பிள்ளைகள் தெருவில் நடமாட முடியவில்லை என்கின்றனர்
 ஜல்லி ஏற்றி செல்லும் லாரிகள் தெருவில் உள்ள மின் இணைப்பு ஒயர்கள் மற்றும் கம்பிகளை அறுத்துவிட்டு செல்கின்றன இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது  இது சம்பந்தமாக ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தும் இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் லாரிகள் செல்ல தடை செய்வதற்கு சாலை மறியல் ஈடுபட்டால் ரத்தினகிரி போலீசார் எங்களை அழைத்துச் சென்று பணக்காரர்களோடு மோதாதீர்கள் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டுகின்றனர்.
 

இளான் ரெடிமிக்ஸ் கம்பெனிக்கு இடம் கொடுத்துள்ள தயாளன் ஊர் பொதுமக்கள் மீது பணம் கேட்பதாக  பொய்யான கேஸ் கொடுத்து மிரட்டுகிறார் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை தடுத்து நிறுத்த ரத்தனகிரி போலீசார் முயற்சித்த போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது நடவடிக்கை எடுக்க வாக்குறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர்

ஆர்.ஜே.சுரேஷ்