ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்.!

கிருஷ்ணகிரி

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்.!

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்

விவசாய குடும்பத்தில் பிறந்த கர்நாடக முதலமைச்சர் மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார் : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி புகழாரம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓசூர் அருகே உள்ள கர்னூர் பகுதியில் பேரவை பகுதி செயலாளர் பெரியசாமி ஏற்பாட்டில், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி துணை செயலாளர் வடிவேல், தகவல் தொழில்நுட்ப பகுதி துணை தலைவர் அம்பரீஷ் ஆகியோர் தலைமையில்,அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஓசூர் நவதி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரப்பா தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர் அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, தமிழகத்தில் இரும்பு பெண்மணி போல ஆட்சி செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பின்தங்கி இருந்த தமிழகத்தை முன்னேற்றியவர் எம் ஜி ஆர். அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அம்மா அவர்கள் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார். ஆனால் தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் அமைச்சர்கள் நான்கரை லட்சம் கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதாகவும், இலவசமாக 200 யூனிட் மின்சாரம்  வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார்கள், அங்குள்ள முதலமைச்சர் நல்ல முதலமைச்சர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அதை நிறைவேற்றினார். ஆனால் தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மூன்று வருடங்களாக நிறைவேற்றாமல் இருந்த முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் என குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் சண்டை போட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை தமிழக பெண்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாங்கி கொடுத்தார் என தெரிவித்தார். 

மேலும் நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி, ஓசூர் பகுதி செயலாளர் ராஜு, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி ஹேமகுமார், கலாவதி சந்திரன் தில்ஷத்  ரகுமான், பேரவை மாவட்ட பொருளாளர் பாப்பண்ணா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் கே டி ஆர் என்கின்ற திம்மிராஜ், பாசறை மாவட்டத் துணைத் தலைவர்ல் நாகராஜ் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சாஜு பாய், சார்புஅணி மாவட்ட தலைவர் நடராஜ், கழக நிர்வாகி தேவராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் யோகேஷ் ரெட்டி, குடே கவுடா, பகுதி ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ