கிடப்பநாயனப்பள்ளி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி

கிடப்பநாயனப்பள்ளி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர்  வடக்கு ஒன்றியம், கிடப்பநாயனப்பள்ளி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு விழா மற்றும் காத்தான்பள்ளம் கிராமத்தில் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பூமி பூஜை மற்றும் ரூ.12  இலட்சம் மதிப்பீட்டில்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு  கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான தே.மதியழகன் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

செய்தியாளர் 

மாருதி மனோ