ஒசூர் அருகே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் .!
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த லிங்காபுரம் கிராமத்தில் சாணமங்கலம் கிராமத்தை சேர்ந்த சாக்கி ஸ்டிரைக்கர்ஸ் அணி நடத்திய கிரிக்கெட் தொடரில், ஒசூர் பகுதியை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றிருந்தன. பல சுற்றுகளாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை சானமங்கலம் கிராமத்தை சேர்ந்த சாக்கி ஸ்டிரைக்கர்ஸ் அணியும், இரண்டாவது பரிசை பியூச்சர்ஸ் அணியும் வென்றது..
இந்தநிலையில் இறுதிப்போட்டியை துவக்கி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் முதல் 4 பரிசுகளை வென்ற அணிகளுக்கு முறையே 30,000 ரூபாய், 20,000 ரூபாய், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என வழங்கினார்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஓசூர் அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், துணை ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ