ஜோதிமணி எம்.பி.யை தவறாக பேசிய பா.ஜ.க பிரமுகரை கைது செய்ய புகார் மனு.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அவதுறாக பேசிய
கரூர் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆடசியர் மற்றும் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கரூர் மாவட்ட பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணியை கடந்த பல நாள்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த செந்தில்நாதன் அவதூறாக பேசி உள்ளார்.
இது குறித்து செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இதனை அடுத்து தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி கிழக்கு, மற்றும் மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவிகளான திருமதி உமாசங்கரி மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர்
கரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த செந்தில்நாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மகிளா காங்கிரஸ் தலைவர்களான உமா சங்கரி மற்றும் உமா மகேஸ்வரி கரூர் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 7 வருடங்களாக மக்கள் பணியினை மேற்கொண்டு வரும் ஜோதிமணி அவர்களை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அருவருப்பான முறையில் பேசி உள்ளது மிகவும் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது. சிறந்த முறையில் மக்கள் பணிகளை செய்து வரும் ஜோதிமணியை பாரதிய ஜனதா கட்சியைசேந்த மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அறுவெருக்கும் விதமாக பேசியதை கண்டித்து மகிளா காங்கிரஸ் தலைவர் திருமதி ஹசினா சையத் அவர்களின் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்து உள்ளோம். உடனடியாக ஜோதிமணியை பேசிய பாஜாக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் மீது உரிய வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தொடர்ந்து பெண்களை இழிவாக பேசிவரும் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட மகிளா காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர்களான லெனின் பாரதி, தேவிகா, கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
