முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.!

கிருஷ்ணகிரி

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.!

கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தற்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரியை அடுத்த தாளாபள்ளியில் மகளிர் அணி செயலாளர் சுமதி மாது தலைமையில், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலையில், பெத்ததாளாபள்ளி எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் தூய்மைப் பணியாளர்களுக்கு வேஸ்டி சேலைகளும் வழங்கி கொண்டாடினர்.

இதே போல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக கட்சி அலுவலகம், கிருஷ்ணகிரி ரவுண்டானா,  கிருஷ்ணகிரி பழையபேட்டை, வேட்டியம்பட்டி, பணிமனை என பல்வேறு இடங்களில் செல்வி. ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது.

மேலும் இந்த விழாவின் போது ஒன்றிய செயலாளர் சோக்கடி ராஜன், கன்னியப்பன், சூர்யா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களான திருமதி மனோரஞ்சிதம் நாகராஜன்,  முனி வெங்கடப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன், நகரச் செயலாளர் கேசவன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதாநவாப், சோபன்பாபு, ஐடி விங் வேலன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் சின்னதம்பி, நகர துணைத் தலைவர் குரு, முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் வெங்கடசலம், வர்த்தக அணி துணை தலைவர் பெருமாள் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த வாசுதேவன், சீனி, ரத்தினவேல், ஜெய ஆஜி, ரமேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ