அமைப்பு சார ஓட்டுனர் அணி சார்பில் கிட்டம்பட்டி கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி  ஜெயலலிதாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து .!

கிருஷ்ணகிரி

அமைப்பு சார ஓட்டுனர் அணி சார்பில் கிட்டம்பட்டி கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி  ஜெயலலிதாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து .!

கிட்டம்பட்டியில் கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவு நாளினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துக் கொண்டு செல்வி ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமைப்பு சார ஓட்டுனர் அணி சார்பில் கிட்டம்பட்டி கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி  ஜெயலலிதாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமைப்பு சார ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஜெயா ஆஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியின் போது கிட்டம்பட்டி கிராமத்தில் செல்வி ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின்  நினைவு இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் திருஉருவப் படத்திற்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி மனோரஞ்சிதம் நாகராஜன், முனிவெங்கடப்பன் முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன், ஒன்றிய செயலாாளர்களான கன்னியப்பன், சூரிய பெருமாள், அதிமுக கட்சியை சேர்ந்த தாபா வெங்கட்ராமன், கார்த்திக், பூசாரிப்பட்டி ரமேஷ் உள்ளிட்ட கிட்டம்பட்டி கிராம மக்களும் கலந்து கொண்டு செல்வி ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ