சென்னையில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் அறிமுக கூட்டம் .!
கிருஷ்ணகிரி
சென்னையில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துக் கொண்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. இரகுவிடம் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மாவட்ட தலைவருக்கான அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்தெடுக்கப்பட்ட 77 மாவட்டத் தலைவர்களின் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.சி. இரகு உள்ளிட்ட அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்தக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அகில இந்திய செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பொருந்தகை ஆகியோர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கான அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.சி. இரகு வாசிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி வாய்ப்பு அளித்தது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திட ஒரு வாய்ப்பு அளித்ததோடு மாவட்ட தலைவருக்கான அங்கிகார அடையாள அட்டையை வழங்கிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும்
அகில இந்திய செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பொருந்தகை, சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணு கோபால், கிருஷ்ணகிரி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தனது நன்றினையும் தெரிவித்துக் கொண்டார்.
