ஓசூர் தட்சின திருப்பதி கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு தீபாதாரணை காட்டி வழிபாடு நடத்திய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ குருதேவ் ரவிசங்கர்.!

கிருஷ்ணகிரி

ஓசூர் தட்சின திருப்பதி கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு தீபாதாரணை காட்டி வழிபாடு நடத்திய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ குருதேவ் ரவிசங்கர்.!

ஓசூர் தட்சின திருப்பதி கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு தீபாதாரணை காட்டி வழிபாடு நடத்திய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ குருதேவ் ரவிசங்கர் : தென்பெண்ணை ஆற்று நீரை சுத்தமாக வைத்து மரங்களை வளர்க்குமாறு அறிவுரை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் தட்சின திருப்பதி கோயில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போல ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோயிலும் புகழ்பெற்ற தலமாகும், இந்த தட்சிண திருப்பதி கோயிலுக்கு ஆன்மீகத் தலைவரான வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று வருகை புரிந்தார். கோயில் நிர்வாக விடுத்த அழைப்பின் பேரில் அவர் இன்று கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற குருதேவ் ரவிசங்கர் வெங்கடேஸ்வர சுவாமிக்கு தீபாதாரணை காட்டி வழிபாடு நடத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என வழிபாடு நடத்தினர். பின்னர் சுவாமிகளுக்கு அவர் புடவைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் அங்கு புதிதாக செய்யப்பட்டு வரும் தேர் கட்டும் பணிகளை பார்வையிட்ட அவர், கோயில் கரையோரத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர் ஓடும் பகுதியை பார்வையிட்டு ஆற்று நீரை சுத்தமாக வைத்து கொள்ளுமாறும், அத்திமரம், ஆலமரம் வேப்பமரம், அரளி, மா உள்ளிட்ட மரங்களை வளர்க்குமாறு கோயில் நிர்வாகிகளிடம் அறிவுரை கூறினார். அதனைத் தொடர்ந்து கோயில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குருதேவ் ரவிசங்கர் வருகைய ஓட்டி கோயிலில் பரதநாட்டியம், கோலாட்டம். பஜனை மற்றும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை தட்சின திருப்பதி கோயில் கமிட்டி தலைவர் நாராயணசாமி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், ஜெய் ஆர் குரூப் தலைவர் பரத் குமார், அதிமுக ஒன்றிய செயலாளர்ள் மாதேஷ், பாபு  வெங்கடாசலம், கல்குவாரி அசோசியேசன் தலைவர் எஸ் ஆர் சம்பங்கி, அதிமுக மாவட்ட நிர்வாகி  லோகேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரப்பா, அகில இந்திய ரியல் எஸ்டேட்  தகவல் தொழிற்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர்  ரங்கநாதன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

கோயில் நிகழ்ச்சியை முடித்த குருதேவ் ரவிசங்கர் பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பெங்களூர் சென்றார். குருதேவ் ரவிசங்கர் தட்சிண திருப்பதி கோயிலுக்கு வருவதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர்.