பர்கூர் அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிகப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் இராமமூர்த்தி, முருகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தமிழரசன், மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் இக்கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால், மாநில செயலாளர் உதயகுமார், மாநில அமைப்பாளர்கள் கோணப்பன், ராம்தாஸ் ஆகியோர் கலந்துகலந்துகொண்டு. கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக
விவசாய நிலங்களை நாசம் செய்யும் காடுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல உரிய அனுமதி அளித்திட வேண்டும்,
காட்டு யானைகளால் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,
விவசாயிகள் பல்வேறு காரணங்களும், கட்டுப்படியான விலை கிடைக்காமலும், வன விலங்குகளின் தொல்லையால் வங்கிகளில் பெற்ற கடனை கட்டமுடியாமல் இருப்பதினால் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்,
தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக இருக்க வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள் சம்பத்,
வெங்காட் ராமன், மாவட்ட துணைச்செயலாளர்கள் குமார் வரதராஜ், ஒன்றிய மகளீர் அணி தலைவர் கோவிந்தம்மாள் ஒன்றிய தலைவர்கள் கமலநாதன் லட்சுமணன் சங்கர், சங்கத்தின் பொருளாளர் கருணாகரன், மற்றும் தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த தோட்டப்பன், சந்திரன், வீரபத்திரன், சுப்பிரமணி, செந்தில் குமார், ரமேஷ், மல்லேசன் உள்ளிட ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
