கிருஷ்ணகிரியில் புகையில்லா போகி பண்டிகை. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் புகையில்லா போகி பண்டிகை. !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் "புகையில்லா போகி” பண்டிகை கொண்டாடும் வகையில், மாநகராட்சி ஆணையர் முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., தலைமையில் ஓசூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களுக்கு பயன்படாத பொருட்களை தெருக்களில் வீசி எரிக்காமல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் பொருட்டு குப்பை கொட்டும் இடங்களை சுத்தம் செய்தும் கோலமிட்டு பூச்செடிகள் வைத்து அழகு செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், மண்டல குழுத் தலைவர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, காந்திமதி, மாமன்ற உறுப்பினர் வரலட்சுமி, மற்றும் மாநகர நல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ