ஜோதிநகர் பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி

ஜோதிநகர் பள்ளியில் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2024 -25 கல்வி ஆண்டுக்கான "பள்ளி ஆண்டு விழா" சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவர்களின் பேச்சு, பாடல், நடனம் போன்ற கல்வி, கலை, கலாச்சாரம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கல்வித் துறை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் ச. லோகேஷா, மு. சாந்தி, வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் சண்முகம், ஆகிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தி. வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் க.புவனேஷ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இர. மகாலட்சுமி, மணிகண்டன், சுகுணா, உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு பள்ளிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டினர்.
செய்தியாளர்
மாருதி மனோ