கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள அதிபதி நகரில் பொங்கல் விழாவினை முன்னிட்டு எருது விடும் விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள அதிபதி நகரில் பொங்கல் விழாவினை முன்னிட்டு எருது விடும் விழா.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள அதிபதி நகரில் பொங்கல் விழாவினை முன்னிட்டு எருது விடும் விழாவில் 300 எருது பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு பல்சர் வாகனம் உள்ளிட்ட பலவேறு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் அருகே உள்ள அதிபதி நகரில் பொங்கல் விழாவினை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது, இவ்விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர், கப்பல் வாடி, மல்லப்பாடி, ஒசூர், வாணியம்பாடி திருவண்ணாமலை,  திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர்,  மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300எருதுகள் பங்கேற்றிருந்தன,

அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட  பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில்120 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த எருதுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக பல்சர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இருசக்கர வாகனம் உள்ளிட்ட 150 பரிசுகள் விழாக் குழுவினர்கள் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஏராளமான இளைஞர்கள்  மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள்
 
இந்த எருது விடும்விழாவினை அதிபதி நகர்  பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிராம பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள் 
மற்றும் எம்.எஸ்.ஆர். குரூப்ஸ் சிறப்பாக  செய்திருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ