சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி, பணத்தை திரும்ப பெற்று தரும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார். !

கிருஷ்ணகிரி

சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி, பணத்தை திரும்ப பெற்று தரும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார். !

கிருஷ்ணகிரி அருகே சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை மீண்டும் செலுத்தாமல் சுமார் 7 லட்சம் வரை ஏமாற்றிய நபர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா மாநிலம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிக்கோவில் கிராமத்தை சேர்ந்த 80 விவசாயிகள் இரண்டு குழுக்களாக கடந்த பல ஆண்டுகளாக மாதாந்திர சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

இந்த சீட்டில் உள்ள உறுப்பினர்கள்  சீட்டு பணத்தினை 33 எடுத்து உள்ளனர். ஆனால் இந்த 33 உறுப்பினர்களும் எடுத்த சீட்டு பணத்தை எடுத்தவர்கள் திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் கட்டிய  சீட்டு பணம் கிடைக்காமல் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீட்டு மூலம் பெற்ற பணத்தை மீண்டும் கட்டுமாறு கேட்டும் இதுவரை பணம் கொடுக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக  7 லட்சம் வரை ஏமாற்றி உள்ளனர்,

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுடன்  கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களை நேரில் சந்தித்து சீட்டு பணம் எடுத்து விட்டு திரும்ப கட்டாமல் சுமார் 7 லட்சம் ஏமாற்றிவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தருமாறு வேண்டி புகார் மனுவினைக் கொடுத்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் 80 விவசாயிகள் ஒன்றிணைந்து சீட்டு நடத்தினோம். இதில் 33 பேர் சீட்டு பணம் எடுத்தனர். ஆனால் அவர்கள் பணம் திரும்ப கட்டாததால் 7 விவசாயிகளுக்கு வரவேண்டிய 7 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக பணத்தை கேட்டு போராடி வருகிறோம். சிறுக சிறுக பணத்தை சேர்த்து சீட்டு கட்டினோம். ஆனால் முதலில் சீட்டு பணத்தை எடுத்தவர்கள் திரும்ப கட்டாததால் எங்களுக்கு வரவேண்டி 7 லட்சம் ரூபாய் இன்னும் வரவில்லை. ஆகையால் மாவட்ட காவல் கண்காணிப்பாளார்  அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ