விவசாயிகள் பயன்பெறும் வகையில் 17 : 17:17: என்.பி.கே.என்ற புரிய காம்ப்ளக்ஸ் உரம் அறிமுக விழா நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 17 : 17:17: என்.பி.கே.என்ற புரிய காம்ப்ளக்ஸ் உரம் அறிமுக விழா நடைபெற்றது.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஸ்பிக் மற்றும்
Greenstar Fertilizers Limited நிறுவனம் ஏற்கனவே விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி. எம்.ஓ.பி. மற்றும் 20:20:0:13, 16:20:0:13, 10:26:26 போன்ற பல காம்ப்ளஸ் உரங்களை வழங்கி வருகின்றது,

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் இதனுடன் சேர்த்து 17:17:17 என.பி.கே உரம் என்ற புதிய காம்ப்ளஸ் உரத்தையும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைசந்து கிராமத்தில் அமைந்துள்ள சப்தகிரி அக்ரோ சர்விஸ்சில் நடைபெற்றது.
இத்த அறிமுக விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் முத்துசாமி மற்றும் சப்தகிரி அக்ரோ சர்விஸ் உரிமையாளர் பார்த்திபன் ஆகியோர் பூஜைகள் செய்து விற்பனையை துவக்கி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பேசிய ஸ்பிக் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் முத்துசாமி.....
விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏற்கனவே
யூரியா, டி.ஏ.பி. எம்.ஓ.பி. மற்றும் 20:20:0:13, 16:20:0:13, 10:26:26 போன்ற பல காம்ப்ளஸ் உரங்களை வழங்கி வருகின்றது.
இதனுடன் 17:17:17 என. பி.கே உரம் என்ற புதிய காம்ப்ளஸ் உரத்தையும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நெல் பயிர்களுகளுக்கு தேவையான
சமநிலையான சத்துக்கள் மற்றும் உயர்தர சத்துக்களை கொண்ட இந்த உரம், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும் இந்த உரம் மிகவும் ஆதரவாக இருக்கும்.
ஆகையால் விவசாயிகள் இந்த நம்பகமான 17:17:17 என். உரத்தினை பயன்படுத்தி நல்ல மகசூலை பெறலாம், விவசாயிகளுக்கு தேவையான இந்த உரத்தினை தடை இன்றி கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
