மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் உபதேசியார்கள் நல வாரிய விழிப்புணர்வு கூட்டம் .!

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் உபதேசியார்கள் நல வாரிய விழிப்புணர்வு கூட்டம் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் உபதேசியார்கள் நல வாரிய விழிப்புணர்வு கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து போதகர்களும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் நியு ஆங்லிக்கன் சினாட் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறித்தவ 
உப தேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிறித்தவ 
உபதேசியர்கள் நல வாரியத் தலைவர் டாக்டர் விஜிலா சத்தியானந்த் கலந்துகொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கிறிஸ்துவர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியினையும் துவக்கி வைத்து தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலராக விளங்கி வருகிறார், ஆகையால் நல வாரியத்தில் அனைவரும் உறுப்பினராக இணைந்து அரசின் திட்டங்களை பெற முன்வர வேண்டும். குறிப்பாக மக்களின் வசதிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் கல்லறை தோட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம், நியு ஆங்லிக்கன் சினாட் இந்தியா இப்பேராயத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரும் இப்பேராயத்தின் முதன்மை பேராயர் டேனியல் சக்கரவர்த்தி கலந்து கொண்டு தமிழகத்தில் எந்த ஒரு வசதியும் இன்றி வசித்து வரும்  அனைத்து போதகர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் வீடுகள் இன்றி வாடகை விடுகளில் வசித்து வரும் அனைத்து போதகர்களுக்கும் தமிழக அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.

மேலும் இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட போதகர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ