மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்எம்.சி. இரகு .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்எம்.சி. இரகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை இ.கா.ப. மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து மரியாதை செய்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். எம்.சி இரகு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
