கிருஷ்ணகிரி ராசுவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ராசுவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி ராசுவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் சத்தி கேந்திரா சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி ராசுவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா பொறுப்பாளர் மணிவண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற  தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக நகர செயலாளர் கேசவன் பாரதிய ஜனதா கட்சியின் இராணுவ பிரிவு மாநில  செயலாளர்  கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் விமலா, நகர் மன்ற உறுப்பினர் சங்கர்,  பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேலன், நகர துணைத் தலைவர் சாமி சரவணன், பொருளாளர் குணசேகரன், கிளை தலைவர்கள் வெங்கடேசன், முனிரத்தினம், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்தின் போது தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு என எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் போதை கலாச்சாரத்தினை கட்டவிழ்த்து விட்டதுதான் தமிழக அரசின் சாதனையாக உள்ளது.

ஆகையால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளை  எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க ஒவ்வொரு நபர்களும் மக்களிடம் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கினை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்ததாலே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்பார். ஆகையால் நீங்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மேலும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த புல்லட் அரி, கொட்டை,பாக்கி என்ற வெங்கடேன். மாரி, ஓ.பி.சி அணி மாதவன், நாகராஜ், பாஸ்கர், நாகம்மாள், தீபக், சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ