கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டார்.

இதன் முன்னதாக மேற்கு மாவட்டத்திற்கு வருகை தந்த டாக்டர் செல்லக்குமாருக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் பாபு தலையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள வள்ளலார் திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதான திட்டத்தினையும் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒசூர் ராமர் திருக்கோவில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவிலும் டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டு வழிபட்டார்.

மேலும் இதேபோல மேற்கு மாவட்டதிற்கு உட்பட கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் முருகன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டார். இதன் முன்னதாக   கொல்லப் பள்ளிக்கு வருகை தந்த டாக்டர் செல்லக் குமாருக்கு முன்னாள் பீமாண்டபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் மனோகரன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ்பாபு, முன்னாள் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒசூர் மாநாகராட்சி காங்கிரஸ் தலைவர் தியகராஜன். மகளீர் அணி தலைவி ராஜம்மாள், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுமான், பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி, முன்னாள் சேர்மன் ஆறுமுகம், வட்டாரத் தலைவர்கள் இராமமூர்த்தி, தனஞ்செயன், ராமன், மாவட்ட செயலாளர்கள் ஹரி, சத்திவேல், செல்வராஜ், அயோத்தி, சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ், காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு பிரிவு தலைவர் பீட்டர் சத்திய ராஜ், ராஜீவ் காந்தி அறக்கட்டளை தலைவர் அம்ரேஸ், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அண்ணாமலை, ராஜா, சுந்தர்ராஜ், கீர்த்தி வாசன், பிரவின், பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ