முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா : மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு ஊர்வலம் அதிமுகவினர் உற்சாகமாய் பங்கேற்பு..!
கிருஷ்ணகிரி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா : மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு ஊர்வலம் அதிமுகவினர் உற்சாகமாய் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை ஒட்டி வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு ரத ஊர்வலம் நடைபெற்றது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஸ் தலைமையில் நடந்த ஊர்வலத்தினை ஒசூர் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜீ ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னதாக ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மலர் தூவி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து ஓசூர் ராம்நகரில் இருந்து ரத ஊர்வலம் புறப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தினை கிரேன் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ரத ஊர்வலம் ராயக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பாலகிருஷ்ண ரெட்டி அங்கு கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாளை தொண்டர்களோடு சேர்ந்து கொண்டாடினார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் ஓசூர் பகுதி செயலாளர்ள், வாசுதேவன் அசோக்கரண்டி மஞ்சு, ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி, அவைத் தலைவர் நாராயணன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னை கிருஷ்ணா, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி ஹேமா குமார், தில்ஷாத் ரகுமான், சிவராமன், ஷில்பா சிவகுமார், பேரவை மாவட்ட துணை செயலாளர் நாராயண ரெட்டி, இணை செயலாளர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், பாசறை மாவட்ட தலைவர் பிரசாந்த், இளைஞரணி மாவட்ட தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதி அசு என்கின்ற லக்ஷ்மன், மாணவரணி மாவட்ட தலைவர் ஆதி, சார்பணி மாவட்ட நிர்வாகிகள் பி எம் ஆர் மணி, சந்தோஷ் சாமிநாதன், மகேஷ், மஞ்சு, சுரேஷ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், துணைத் தலைவர் முருகன், இணை செயலாளர் மாதேஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆதி வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் அரிய நாயுடு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
