அம்பேத்கர் நகர் ஏரிக்கரை பகுதியில் "தூய்மையே சேவை 2025" என்ற இயக்கத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அமானுல்லா தலைமையில் செயல் அலுவலர் செ.ரவிசங்கர் முன்னிலையில் பனை விதைகள் நடப்பட்டன.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தேர்வு நிலை பேரூராட்சியில், ஆறாவது வார்டு, அம்பேத்கர் நகர் ஏரிக்கரை பகுதியில் "தூய்மையே சேவை 2025" என்ற இயக்கத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அமானுல்லா தலைமையில் செயல் அலுவலர் செ.ரவிசங்கர் முன்னிலையில் பனை விதைகள் நடப்பட்டன.
உடன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், மாவட்ட பொருளாளர் கதிரவன், திமுக நகர செயலாளர் பா.கலைமகள் தீபக், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மா.சிவன், கே.கதிர்வேல் திருமதி சுமித்ரா தவமணி, அபிபுன்னிஷா சாதிக் பாஷா, மணிமேகலை மணி, கவிதா குப்புசாமி, ஸ்ரீராமன் மற்றும் பேரூராட்சி இளநிலை பொறியாளர் மகேந்திரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ