குவைத்தில் MKP சார்பாக நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்!
குவைத்

குவைத்தில் MKP_சார்பாக நடைபெற்ற மாபெரும் இரத்த_தான முகாம்..!
ஜனவரி:27,.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஒன்பதாம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் மண்டல செயலாளர் பொதக்குடி சதக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை மண்டல துணை செயலாளர் மாயவரம் சபீர் கிராஅத் ஓதி துவக்கிவைக்க, மண்டல மருத்துவ அணி துணைச் செயலாளர் புதுவயல் அஷ்ரப் அனைவரையும் வரவேற்றார்.
மருத்துவ முகாமை மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் குவைத் மண்டல பொறுப்பாளர் நீடூர் முஹம்மது நபீஸ் துவக்கி வைத்தார்.
இதில் மண்டல அவைத் தலைவர் கோணுழாம்பள்ளம் அன்சாரி, மண்டல பொருளாளர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல ஆலோசகர் சுவாமிமலை ஜாகிர் உசேன் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சுப்ரீம் கார்கோ டிராவல்ஸ் நிறுவனர் ஜனாப் அபூபக்கர் சித்திக், ரிலையன்ஸ் கார்கோ நிறுவனர் காதர் உசேன், மதிமுக நிர்வாகி பொறி.மணிவாசகம், ஷிஃபா அல் ஜசீரா மருத்துவமனை நிர்வாக மேலாளர் திரு N.குணசீலன் பிள்ளை, எலும்பு முறிவு நிபுணர் Dr.Bibitharan, சமூக ஆர்வலர் சாதிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாக டாக்டர்.வாசுதேவன் ஜகன்நாதன் MBBS. MD.DA ( மூத்த மயக்கவியல் நிபுணர்-வரா மருத்துவமனை, குவைத்) முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரத்தம் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் உள்ள நன்மைகள் பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு குவைத் மஜக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்துவதை வெகுவாக பாராட்டியதோடு இரத்த தானம் வழங்கியவர்களை வாழ்த்தினர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மஜக - வின் இரத்ததான முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் குவைத் மத்திய இரத்த வங்கிக்கு குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நினைவு பெட்டகம் வழங்கப்பட்டது.
இதில் 80க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர், அவர்களுக்கு மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக பாராட்டு சான்றிதழ், மஜக சாவிக்கொத்து மற்றும் ஊட்டச்சத்து கிட் வழங்கபட்டது, வருகை தந்த அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டசத்து கிட் வழங்கப்பட்டது.
இதில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-tic) குவைத் அயலக திமுக, காயிதே மில்லத் பேரவை, குவைத் அஇஅதிமுக, தாய்மண் கலை இலக்கிய பேரவை (விசிக) குவைத் தளபதி பேரவை, TMCA, குவைத் மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, குவைத் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம், தேமுதிக, குவைத் தமிழக வெற்றி கழகம் குவைத்,
தமிழ் ஓட்டுநர்கள் சேவை மையம், குவைத் தமிழ் மக்கள் சேவை மையம், வெளிநாடு வாழும் தமிழர் நல சங்கம், தமிழர்கள் ஓட்டுநர் சேவை மையம், கலகலப்பு நண்பர்கள், குவைத் உதவும் கரங்கள், அல் அவாதி ஆப்டிகல்ஸ், அன்னை பாத்திமா அறகட்டளை, உலகளாவிய தமிழர்கள் நலசங்கம், இலங்கை நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மண்டல துணைச் செயலாளர் நாகை இப்ராஹிம், நீடூர் முஹம்மது ஹாலிக், மண்டல கொள்கை பரப்புச் செயலாளர் ஏனங்குடி பாசில், மண்டல தொண்டரணி செயலாளர் கூத்தாநல்லூர் ஜாபர் அலி, மண்டல இளைஞர் அணி செயலாளர் சீர்காழி யூனுஸ், மண்டல இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை தஸ்தகீர், மண்டல சமூக நீதி பாசறை துணைச் செயலாளர் மதுரை குமார், மண்டல வணிக அணி துணைச் செயலாளர் ஆயங்குடி மூமின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மண்டல மருத்துவர் செயலாளர் விளாங்குடி தாஹிர் நன்றி உரையாற்றினார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
விளம்பர தொடர்புக்கு
97 87 416 486
செய்தி தொடர்புக்கு
90420 51486