நத்தம் அருகே ஊராளிபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!

திண்டுக்கல்

நத்தம் அருகே ஊராளிபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!

நத்தம் அருகே ஊராளிபட்டியில்
முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் அருகே ஊராளிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி  கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

அன்று மாலை முதற்கால யாகபூஜையும். தொடர்ந்து நேற்று முன் தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகளும் நடந்தது. நேற்று காலை  நான்காம் கால யாகபூஜையைத் தொடர்ந்து. யாகசாலையில் காசி, ராமேஸ்வரம், கரந்தமலை உள்ளிட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வந்து பூஜையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலைச் சுற்றி நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் காத்தாம்பட்டி, ஏரக்காபட்டி, எட்டையம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராளிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர்

அழகர் சாமி

விளம்பரம் & தொடர்புக்கு 

97 87 41 64 86