திமுக, அதிமுக கூட்டணியை தவிற 3 வது அணி .!
அரசியல்

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பி வருகின்றன.திமுக, அதிமுக கூட்டணியை தவிற 3 வது அணி உருவாகும் என அரசியல் வட்டாரங்களில் தகவல்
குறிப்பாக பாமக உடன் கூட்டு சேர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தேர்தல் வியூக நிபுணரான ஜான் ஆரோக்கியசாமி முயன்று வருகிறார். பாதிக்குப் பாதி சீட், பாதி பாதி ஆட்சி காலம் என்ற உடன்படிக்கையோடு முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
எதற்கு இவ்வளவு அவசரம் என்பது போல் தான் இருக்கிறது தமிழக அரசியல் சூழல். கடந்த காலங்களில் சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்ற தேர்தலானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்பட்ட வரலாறு உண்டு.
ஆனால் இந்த முறை ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் அது அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கூட்டணியை திமுக உருவாக்கியது.
தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலையும் சந்தித்தது. அதே கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக, பாஜக, பாமக கட்சிகள் உடன் கூட்டணி மாறி மாறி அமைந்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி ஒன்றாக இருந்த நிலையில் அதற்குப் பிறகு பிளவுபட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில் கூடுதலாக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை வரவழைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி என சீமான் அறிவித்துவிட்டார். இதற்கிடையே அரசியலில் புதிய வரவாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. விஜய் தனித்துவிடப்பட்டதாக சிலர் கூறினாலும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை நிச்சயம் விஜய் பெரிய கூட்டணியை அமைப்பார் என்கின்றனர். தற்போதைக்கு கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மண்டல வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆனாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் பிரமுகர்கள். தமிழகம் முழுவதும் விஜய்க்கு பரீட்சையும் இருக்கும் நிலையில், பாமகவும் தமிழகத்திற்கு புதிய கட்சி ஒன்றும் அல்ல. அந்தக் கட்சிக்கும் நல்ல அறிமுகமும், வாக்கு வங்கியும், தொண்டர் படையும் இருக்கிறது. எனவே பாமக உடன் கூட்டணி வைக்கலாம் என ஜான் ஆரோக்கியசாமி கூற அதற்கு விஜய் தரப்பும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆட்சியில் பாஜக பங்கு கேட்டு வரும் நிலையில் பாமகவும் அதை நோக்கியே பயணிக்கிறது. அதற்கு ஏற்றார் போல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூட்டணி ஆட்சிக்கு தயார் என விஜய் கூறியதையும் கவனிக்க வேண்டும். இதனால் பாமக தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கின்றனர்.
இரண்டரை ஆண்டுகள் அன்புமணி முதலமைச்சர், இரண்டரை ஆண்டுகள் விஜய் முதலமைச்சர், பாதிக்குப் பாதி கூட்டணி பங்கீடு, தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்து செயல்படுவது என முதற்கட்ட டிமாண்டுகளை வைத்து பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பாமகவுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கையும், விஜய்க்கு இருக்கும் பிரபலத்தையும் பயன்படுத்தினால் நல்ல வாக்கு வங்கி கிடைக்கும் என இரு தரப்புமே நினைக்கிறது. ஜான் ஆரோக்கிய சாமியும் ஏற்கனவே அன்புமணி ராமதாஸுக்கு தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றியவர் தான். 2016 இல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு பாமக தனித்து களமிறங்கியது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் போஸ்டர்கள், நாளிதழ்களில் விளம்பரம், சமூக வலைதள விளம்பரம் என அப்போது அது பேசு பொருளானது.
அதற்கு பின்னணியில் இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி.
தற்போது விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரும் கட்சி ஆரம்பித்ததற்கு பின்னரும் தான் ஆரோக்கியசாமி வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பது என முடிவெடுத்திருக்கும் நிலையில் அதற்கான சமிக்கையாக முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது என்கின்றனர் விபரமறிந்த இருதரப்பு நிர்வாகிகள்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
செய்திகள் & விளம்பர தொடர்புக்கு
97 87 416 486