மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி கையேடு.!

தென்காசி

மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி கையேடு.!

தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி கையேடு  வழங்கல்

தென்காசி ஏப்ரல் 22

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் தென்காசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் டிஎன்பிஎஸ்சி போலீஸ் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு  படித்து வருகின்றனர்.

அந்த மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தென்காசி இ. சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும் இலவச போட்டித்தேர்வு பயிற்சியாளருமான ஆசிரியர் முத்துக்குமார் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கையேடுகளை தென்காசி மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் ராமகிருஷ்ணனிடம்  வழங்கினார்.

இதில் நூலகர் சுந்தர் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். போட்டித் தேர்வுகளுக்கான இலவச கையேடுகளை வழங்கிய ஆசிரியர் முத்துக்குமாருக்கு தென்காசி மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் ராமகிருஷ்ணன்  நூலகர் சுந்தர் மற்றும் நூலக பணியாளர்கள் போட்டித் தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர் சார்பாக நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்