நடு வழியில் உள்ள மின் கம்பத்தால் மக்களின் போக்கு வரத்திற்கு இடையூறு.! கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்.!
வேலூர்

மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியாளர்..?
அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாமல் தத்தளிக்கும் பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கருகம்பத்தூர், ஆஜிபுரா பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து இந்த சாலை வழியாக கடந்து செல்கின்றனர்.
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கடந்து செல்லும் வழி தளமாகும். இந்த தெருவில் பல ஆண்டுகளாக தெருவின் மத்திய பகுதியில் மின்கம்பம் அமைத்துள்ளனர்.
இங்கு குப்பைகளை சேர்த்து தினம் தினம் குப்பைகளை அகற்றாமல் குப்பைகளை குவித்து துர்நாற்றம் வீசும் அவல நிலை, துர்நாற்றத்தால் பல்வேறு தொற்று நோய்களில் அவதிப்படும் பொதுமக்கள், இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி துறை நிர்வாகம் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சாலையின் மத்தியில் மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை அமைத்ததால் அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ்கள் நுழைய முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
இந்த வழியாக ஆட்டோக்கள் கூட உள்ளே சென்று வெளியில் வர மிகுந்த சிரமத்திற்குள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மின்துறையிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வரி வசூல்களுக்கும் மற்ற இதர வரி வசூல்களுக்கு மட்டும் வந்து வசூல் செய்து இது போன்ற அவல நிலையை சரி செய்து தாருங்கள் என்று கேட்டால் அவர்கள் கண்டு கொள்ளாமல் செல்வதும் வழக்கம் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, அந்த மின்கம்பத்தின் சம்பந்தப்பட்ட மின் துறைக்கு அந்த மனுவானது 20 நாட்களுக்கு மேலாகியும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனு பார்வர்ட் ஆகவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் நலன் கருதி அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வந்து போகும் அளவில் இந்த கம்பத்தை அகற்றி, இந்தத் தெரு சாலையை 12 அடி அல்லது 15 அடி ஒப்புதல் பெற்றுள்ளார்களா என சரி பார்த்து, ஒதுக்குப்புறமாக கம்பத்தை நட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்
ஆர்ஜே.சுரேஷ்