பெத்ததாளப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார்..!

கிருஷ்ணகிரி

பெத்ததாளப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார்..!

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களின் உத்தரவின்படி கிராம சபை கூட்டம் நடைபெற்றது

இதில் பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பாஞ்சாலியூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் சண்முகம் ஊராட்சியின் வரவு செலவு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் ஊராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி , தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சியை சார்ந்த ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் காவல்துறை அலுவலர்கள், கிராம செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ