ஓசூர் வணிகவரி கோட்ட கள அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம். !

கிருஷ்ணகிரி

ஓசூர் வணிகவரி கோட்ட கள அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வணிகவரித்துறை சார்பாக 2025-26 ஆம் நிதி ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான ஓசூர் வணிகவரி கோட்ட கள அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

உடன் வணிகவரி ஆணையர் எஸ். நாகராஜன் இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் பரமேஸ்வரன் (வருவாய் வசூல் கண்காணிப்பு), ஞானகுமார் (நுண்ணறிவு), திருமதி.ரமாதேவி (தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஓசூர் கோட்ட இணை ஆணையர்கள் முனைவர் ஜானகி வாசுதேவன், திருமதி.அன்புக்கனி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ