தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
Flood

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
சாலை போக்குவரத்தில் மாற்றம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றை கடந்து செல்லும் சாலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்கள் மாற்றுப் பதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் முக்காணி, ஏரல், பேட்மாநகரம், ஆழ்வார்தோப்பு, ஆழ்வார்திருநகரி பாலம் வழியாக தென்திருப்பேரை, குரும்பூர் சென்று திருச்செந்தூர் செல்லும் படி மாற்றுப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயமுத்து