மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதல்.!

சென்னை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகன ஓட்டியை இடித்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி படுகாயம். 

விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜாவின் தந்தை விக்கிரமராஜா. 

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் எச்பி பெட்ரோல் பங்க் அருகில் கடந்த 13ம் தேதி இரவு 9.30 மணியளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவரும், விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜாவின் தந்தையுமான விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை இடித்து தள்ளியதில் அவருக்கு முகத்தாடைக்கு அருகில் பலத்த காயம் ஏற்பட்டு இருசக்கர வாகனம் சேதமானது. 

விக்கிரமராஜா திமுக செல்வாக்கில் உடனடியாக தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்களை அணுகி மற்றொரு சொகுசு கார் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றார். 

இதில் விபத்தில் சிக்கிய நபர் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது, அவரை புகார் கொடுக்கவிடாமல் தடுத்து அவரை ஒரு கும்பல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து மிரட்டி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

அதன் காரணமாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் ஏதும் பெறப்படவில்லை. 

தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரமுகராக இருக்கும் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திவிட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமால் ஓடியது எதற்காக, மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதை மறைக்கவா என்ற சந்தேகம் எழுகிறது. 

தற்போது பாதிக்கப்பட்ட நபர்களால் அன்று எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விபத்து ஏற்படுத்திவிட்டு வேறு ஒரு காரில் ஏறி தப்பியோடிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

SSK