செங்கோட்டையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

தென்காசி

செங்கோட்டையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

செங்கோட்டையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி ஆகஸ்ட் 4


தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் அண்ணா திடலில் வைத்து நகர திமுக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள நுழைவுவாயில் (ஆர்ச்) அகற்றக் கோரியும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஷம பிரச்சாரம் செய்யும் சக்திகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகர கழக செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் ராமர், சிபிஎம்  தாலுகா செயலாளர் வேலுமயில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர செயலாளர் பஷீர்,தமுமுக செங்கைஆரிப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஆ.சண்முகராஜா  வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆர்ச்சை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் காதா்அண்ணாவி, மாவட்ட மருத்துவா் அணி துணை அமைப்பாளா் டாக்டா் மாரியப்பன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத்தலைவா் வழக்கறிஞா் மு.ஆபத்துக் காத்தான், மாவட்ட மகளிரணி தலைவி பேபிரஜப்பாத்திமா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, நகர அவைத்தலைவா் காளி, நகர துணைச் செயலாளா்கள் ஜோதிமணி, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச்பீர்முகம்மது, மணிகண்டன், சுப்பிரமணியன், வார்டு கழக செயலாளா்கள் பாலு, மாரியப்பன், இப்ராஹீம், சேட்(எ)சேக்மதார், கருப்பசாமி, வேலுமணி, குட்டிராஜா, விஜயபாரதன், தொமுச மணி, மாநில பேச்சாளா் செங்கை குத்தாலிங்கம், வார்டு பிரதிநிதிகள் கணபதி, ஆட்டோ மாரியப்பன், காந்திபாபு, ஈஸ்வரமூர்த்தி, டைமன்ட்சலீம், பழனிச்சாமி, நகர இளைஞரணி அமைப்பாளா் ஹாஜாமுகைதீன், துணை அமைப்பாளா்கள் சுப்பிரமணி, மனோஜ், ஜமால், ரியாஸ், வக்கீல் இஸ்மாயில், முத்து மாரியப்பன், கண்ணன், நீராத்திலிங்கம், நகர்மன்ற உறுப்பினா்கள் மேரி, பச்சை வேட்டி இசக்கி துரைபாண்டியன், மணிகண்டன், ஆர்பிஎப் மணி, தகவல் தொழில்நுட்ப அணி பீட்டர் ஜேசுராஜ், தொழிலாளா் அணி அமைப்பாளா் ரவீந்தரன், கொக்கரக்கோ கோவிந்தன், நாகூர்கனி (எ) ஷர்மி, திருமால், யாக்கப்(எ) லியாகத்அலி, சிராஜுதீன், அப்துல் ஹாஜி,திவான்ஒலி காளி, டிரைவர் வேலுச்சாமி, நாட்டாமை ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் செங்கோட்டை மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி,  ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் செங்கைகண்ணன், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை பொதுச் செயலாளர் ராஜீவ்காந்தி, நகர்மன்ற உறுப்பினர் முருகையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதிகள் ஆதிமூலம், சீனிவாசன், நகர தொழிற்சங்க தலைவர் செல்வ கணபதி, நகர துணைத் தலைவர்கள் மாரியப்பன், காதர் அலி, கோதரிவாவா, நகர பொதுச் செயலாளர்கள் இசக்கியப்பன், சுடலைமுத்து, சுப்பிரமணியன், நகர செயலாளர்கள் நடராஜன், கோட்டைச் சாமி, நகர பொருளாளர் சங்கரலிங்கம்,மகளிர் அணி நிர்வாகிகள் முத்துலட்சுமி, தங்கம்,மெகராஜ், வார்டு தலைவர்கள் ரவி, அப்துல் ரஹ்மான், முகம்மது சர்புதீன்,ஜேம்ஸ், கந்தவேல்முருகன், விமல்ராஜ், இளைஞர் காங்கிரஸ்…திவான் ஒலி, பெரியபிள்ளை வலசை கிராம காங்கிரஸ் தலைவர் சாய்பு, மேக்கரை கிராம காங்கிரஸ் தலைவர் சேகர் சிபிஎம் சார்பில்  மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜகோபால், முருகேசன், முகமது காசிம், பழனி, முத்துசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள் சின்னச்சாமி, மதியழகன், சையதுமசூது,
தமுமுக சார்பில் நகர செயலர் யாசர்அராபத், ஹக்கீம், நாகூர்மீரான், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலர் உமர்கத்தார்,
சிபிஐ சார்பில் நகர செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சாமி தோழர், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்தியாளர்

AGM கணேசன்