காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், காவேரிப்பட்டினம் சரக அளவிலான தடகள போட்டிகள் துவக்க விழா .!

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், காவேரிப்பட்டினம் சரக அளவிலான தடகள போட்டிகள் துவக்க விழா .!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், காவேரிப்பட்டினம் சரக அளவிலான தடகள போட்டிகள் துவக்க விழா மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு வழங்கும் விழா, வாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தலைமை ஆசிரியர் ஆர். சிவப்பிரகாஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., MLA கலந்து கொண்டு கொடியேற்றி, ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டியை துவக்கி வைத்தும். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி மகிழ்ந்தார். 

உடன் பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக பள்ளி மேளாண்மைக் குழு நிர்வாகிகள், விழா ஒருங்கிணைப்பாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,  ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டுஉறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழகதொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

செய்தியாளர்

மாருதி மனோ