தென்காசியில் ஐயப்பன் ரத 50 வது ஆண்டு வீதி உலா இன்று நடைபெற்றது.!
தென்காசி
தென்காசியில் ஐயப்பன் ரத 50 வது ஆண்டு வீதி உலா இன்று நடைபெற்றது
தென்காசி டிச 20
தென்காசியில் ஐயப்பன் ரதம் 50 வது பொன் விழா ஆண்டாக வீதி உலா இன்று நடை பெற்றது.
தென்காசியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஐயப்பன் ரதம் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஐயப்பன் ரதம் வீதி உலா இன்று மாலை தென்காசி அருள்மிகு மேலசங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் மேல சங்கரன் கோவில் அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் மாடசாமி ஜோதிடர், தலைவர் முன்னாள் கவுன்சிலர் அழகிரி, செயலாளர் ராமசுப்பு, பொருளாளர் தங்கவேல், தணிக்கையாளர் திருமலைக்குமார சாமி, அமைப்புச் செயலாளர்கள் சுப்புராஜ், கூட்டுறவு மாரிமுத்து, சங்கர், கௌரவ ஆலோசகர்கள் மணி, நடராஜன், மணிகண்டன், துணைத் தலைவர்கள் சதாசிவம், பழனிச் சாமி, கோவிந்த ராஜுலு, துணைச் செயலாளர்கள் வேல்சாமி, ஐயப்பன், அரிபாஸ்கர், சிவா, சொசைட்டி சங்கர் மற்றும் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
