செங்கோட்டை ரயில் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது .!

தென்காசி

செங்கோட்டை ரயில் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது .!

செங்கோட்டை ரயில் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

தென்காசி ஆகஸ்ட் 25

தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய சரகம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கற்பக விநாயகம்
போலீஸார் சகிதம் கண்காணித்து ரோந்து சென்ற போது தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த மரிய முத்தையா என்பவரது மகன் செல்வராஜ் என்பவர் ரூபாய் 48 ஆயிரம் மதிப்புள்ள 960 லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததால் கைது செய்து தென்காசி இருப்பு பாதை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்