மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி.!
தென்காசி

மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி
மாவட்டஆட்சியர்,
எம்பி, எம் எல் ஏ பங்கேற்பு
தென்காசி ஜூன் 02
தென்காசி மாவட்டம், மேலகரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து துவக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலை இல்லா பாட நூல்கள் உள்ளிட்ட உபகரணங்களை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் புதுமைப்பெண், தமிழ் புதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
மேலும் இன்றைய தினம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலை இல்லா பாட நூல்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் 1022 அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் நோட்டுப் புத்தகங்கள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை பள்ளி கல்வித்துறை சார்பில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடல் நூல்கள் சீருடைகள் நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரண பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மேலகரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் துவக்கி வைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது. எனவே மாணவியர்கள் அனைவரும் அரசியல் அனைத்து திட்டங்கள் மூலம் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு அறிந்து நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, காங்கிரஸ் வட்டார தலைவர் பெருமாள், சண்முகவேல், அமானுல்லா, ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்